சென்னை

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஜூனியர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வென்றுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா ஜூனியர் அணிகள் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) நடந்தது. போட்டியில் முதல் இன்னிங்ஸ் முறையே ஆஸ்திரேலியா 293 ரன்னும், இந்தியா 296 ரன்னும் எடுத்தன.

இரண்டா,ம் இன்னிங்ஸ 3 ரன் பின்தங்கிய நிலையில் ஆடிய ஆஸ்திரேலியா 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 110 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 214 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.  இதில் இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் முகமது ஏனான் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடி 61.1 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 214 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் வருகிற 7 ஆம் தேதி தொடங்க உள்ளது.

Chennai, Junior test cricket, India won, Australia lost,