மேற்கு இந்திய தீவு பெண்கள்அணியுடன் ஆட அங்கு சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினர் தினசரி பேட்டா கிடைக்காமல் திண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர், பிசிசிஐ அலுவலக பொறுப்பாளர்கள் தலையிட்டு பிரச்சினை சமூகமாக முடிவுக்கு கொண்டு வந்தாகவும் கூறப்படுகிறது.

இந்திய மகளிர்  கிரிக்கெட் அணியினர் மித்தாலி ராஜ் தலைமையில், மேற்கு இந்திய தீவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளனர். அங்கு  மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி 20 போட்டிகளில் விளையாடுகின்றனர்.

இதற்கிடையில் பிசிசிஐக்கு புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டட நிலையில்,பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வழங்கட்டு வந்த தினசரி பேட்டா திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள் அங்கு செலவுக்கு பணமின்றி திண்டாடியுள்ளனர்.

இதுகுறித்து மகளிர் கிரிக்கெட்அணி பொறுப்பாளர் சபா கரீம் பிசிசிஐக்கு கடிதம் எழுதியதாகவும்,  பி.சி.சி.ஐ.யின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலக பொறுப்பாளர்கள , மிதாலி ராஜ்குழுவினர் மேற்கிந்திய தீவுகளில் தினசரி அலவசன்சு  இல்லாமல் விடப்பட்டது குறித்து அறிந்து,  விரைவாக நடவடிக்கை எடுத்து பிரச்சினையை தீர்த்ததாகவும் கூறப்படுகிறது.

இகுறித்து கூறிய பிசிசிஐ  செயல்பாட்டாளர், செப்டம்பர் 18 ஆம் தேதி நிர்வாகிகள் குழுவின் கீழ் (Committee of Administrators – CoA) நிதி செயல்முறை தொடங்கியது என்றும், செப்டம்பர் 23 ம் தேதி கரீம் ஒப்புதலுக்காக அனுப்பி மெயில் கிடைத்தது, அதுகுறித்து அக்டோபர் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நமது பெண்கள் அணியினர்  பணமில்லாமல் அந்நிய தேசத்தில் இருந்த ஒரு சூழ்நிலைக்கு யார் பொறுப்பு? என்று வினவியவர், புதிதாக பதவி ஏற்ற பிசிசிஐ நிர்வாகிகள்  இந்த விஷயத்தில் உடனடியாக செய்ல்பட்டதால்,  பிரச்சினை சமூகமாக முடிவடைந்ததாக தெரிவித்து உள்ளார்.