2வது டி20 போட்டியில் இந்திய மகளிர் அணியை 5விக்கெட் வித்யாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இங்கிலாந்து மகளிர் அணி இந்திய மகளிர் அணியுடன் 3போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஈதன் முதல் போட்டியில் 41 ரன்கள் வித்யாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்றது. அதனை தொடர்ந்து இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி இன்ரு கவுகாத்தியில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர். இந்தியாவின் முன்னணி வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 12 ரன்களிலும், ரோட்ரிக்ஸ் 2 ரன்களிலும், மிதாலி ராஜ் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்களை மட்டுமே சேர்த்தது.
அதனை தொடர்ந்து 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி வீராங்கனைகள் களமிறங்கினர். அந்த அணியின் தொடக்க வீராங்கனை வியாட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு உதவினார். பிற வீராங்கனைகள் ஆட்டமிழந்தாலும் விட்டுக் கொடுக்காமல் விளையாடிய மியாட் 6 பவுண்ட்ரிகளுடன் 64 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 19.1 ஓவரில் 5விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்து வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.