பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனைகள்  மானு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக ஒலிம்பிக்கில்   இந்தியாவுக்கு 2-வது பதக்கம் கிடைத்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 வரும்  கடந்த (ஜுலை) 26ம் தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது.   இந்த போட்டிகள் ஆகஸ்டு 11ந்தேதியுடன் முடிவடைகறிது. இந்த போட்டிகளில்  இந்தியா வீரர்கள் 117 பேர் உள்பட  பல்வேறு உலக நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்க உள்ளன. இதற்காக பாரிஸ் நகரம் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

போட்டி இன்று 4 வது நாளாக நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலம் வென்று சாதனை படைத்துள்ளது.  10மீ ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில், மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி தென்கொரியாவின் ஓ யே ஜின் & லீ வான் ஜோ ஜோடியை 16-10 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றனர். 124 ஆண்டுகால ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே ஒலிம்பிக் எடிஷனில், இரண்டு பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையை மனு பாக்கர் பெற்றுள்ளார்.

ஏற்கனவே நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில்  மனு பார்க்ர் வெண்கலப் பதக்கம் வென்றார் ர். ஏர் பிஸ்டல் பிரிவில் பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் மனு பாக்கர் பெற்றுள்ளார்.

ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவுக்கு துப்பாக்கிச் சுடுதலில் 5 ஆவது பதக்கம் கிடைத்து.  நடப்பு ஒலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும். இந்த போட்டியில் தென் கொரிய வீராங்கனைகள் முதல் இரண்டு இடங்களை பிடித்து தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை வென்றனர்.

மனு பாக்கருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த  பிரதமர் மோடி, “”வரலாற்றுச் சிறப்புமிக்க பதக்கம்! பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் (#ParisOlympics2024!) இந்தியாவின் முதல் பதக்கத்தை வென்றதற்காக மனு பாக்கருக்கு ( @realmanubhaker ) வாழ்த்துகள். வெண்கலம் வென்றதற்குப் பாராட்டுகள். இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையை மனுபாக்கர் பெற்றுள்ளார். அபாரமான சாதனை! #Cheer4Bharat”” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஒலிம்பிக்கில் ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில்,  ஆண்கள் வில்வித்தை குழு காலிறுதியில் துருக்கியுடன் நேற்று மோதிய இந்திய அணி (தீரஜ், தருண்தீப், பிரவீன்) 2-6 என்ற கணக்கில் போராடி தோற்றது.

ஆண்கள் பேட்மின்டன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் விளையாட இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி – சிராக் ஷெட்டி இணை தகுதி பெற்றுள்ளது.

கெவின் கார்டனுக்கு எதிரான வெற்றி ரத்தான நிலையில், பெல்ஜியம் வீரர் ஜூலியன் கர்ராகியுடன் நேற்று மோதிய இந்திய நட்சத்திரம் லக்‌ஷியா சென் 21-19, 21-14 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார் (43 நிமிடம்). எல் பிரிவில் தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தோனேசியாவின் ஜொனாதன் கிறிஸ்டியை எதிர்கொள்கிறார்.

ஒலிம்பிக் மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியின் பைனலில் நேற்று களமிறங்கிய இந்திய வீராங்கனை ரமிதா ஜிண்டால் (20 வயது) மொத்தம் 145.3 புள்ளிகளுடன் 7வது இடம் பிடித்தார். இதனால் இந்தியாவின் பதக்க நம்பிக்கை தகர்ந்தது.

ஒலிம்பிக் ஆண்கள் துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியின் பைனலில் நேற்று களமிறங்கிய இந்திய வீரர் அர்ஜூன் பபுதா முதல் 3 சுற்றுகளில் பதக்க வாய்ப்பில் நீடித்தார். ஆனால், அடுத்தடுத்த சுற்றுகளில் பின்தங்கியவர், துரதிர்ஷ்டவசமாக கடைசியில் 4வது இடமே பிடிக்க முடிந்தது. அவர் மொத்தம் 208.4 புள்ளிகளை பெற்றார்.
இப்போட்டியில் சீனாவின் லிஹோ செங் (252.4 புள்ளி), சுவீடனின் விக்டர் லிண்ட்கிரின் (251.4), குரோஷியாவின் மிரன் மாரிசிச் (230) முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றனர்.