ராஜ்கோட்: இந்தியா – வங்கதேசம் இடையிலான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. வங்கதேசம் நிர்ணியித்த 154 ரன்கள் இலக்கை எளிதாகக் கடந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி, ஃபீல்டிங் செய்ய முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில், முகமது நெய்ம் 36 ரன்களும், செளம்யா சர்கார் மற்றும் மஹ்மதுல்லா ஆகியோர் தலா 30 ரன்களையும், லிட்டன் தாஸ் 29 ரன்களையும் எடுத்தனர்.
மொத்தம் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது வங்கதேசத்தால். இந்திய தரப்பில் யஷ்வேந்திர சஹல், 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
எளிய இலக்குதான் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு, வெற்றிக்கானப் பொறுப்பு தன்னுடையதாக்கும் என்பதுபோல் ஆடினார். துவக்க வீரரான அவர், 43 பந்துகளில் 85 ரன்களை விளாசி (6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) 197.67 ஸ்ட்ரைக் ரேட்டை தனதாக்கினார்.
அவருடன் இணைசேர்ந்த ஷிகர் தவான் 31 ரன்களை எடுக்க, கிட்டத்தட்ட இந்த ஜோடியே வெற்றியை உறுதிசெய்ய, பின்னால் இருந்த வீரர்களுக்குப் பெரியளவில் சுமையிருக்கவில்லை. இந்திய அணி, 15.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து வெற்றியை எட்டியது.
தற்போது டி-20 தொடர் சமநிலையில் உள்ளது. மூன்றாவது போட்டிதான் கோப்பை யாருக்கு? என்பதைத் தீர்மானிக்க உள்ளது.