மும்பை

ந்திய கிரிக்கெட் அணி தனது ஆஸ்திரேலிய பயணத்தின் போது பகல் இரவு டெஸ்ட் மேட்ச் விளையாடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்த வருட இறுதியில் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்ல உள்ளது.   அங்கு விளையாடப் போகும் போட்டிகளின் விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன.   இந்தப் போட்டிகளில் அடிலெய்டில் வரும் டிசம்பர் 6 முதல் இந்திய அணி தனது முதலாவது டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளத்.

ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியை பின்க் பால் கொண்டு விளையாடும் பகல் இரவு போட்டியாக விளையாட விரும்பியது.  இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி வினோத் ராய், “நமது அணி நிச்சயமாக பகல் இரவு டெஸ்ட் பந்தயத்தை இந்த பயணத்தில் விளையாடாது.   நமது அணி இன்னும் பகல் இரவு டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதில் பரிசோதனை லெவலில் தான் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் முதன்மை அலுவலர் ஜேம்ஸ் சுதர்லாண்ட், “இந்தியா தனது பின்க் பால் போட்டியை ஆஸ்திரேலியாவில் விளையாட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.  உண்மையை சொல்லப் போனால் அவர்கள் இங்கு வந்து எங்களை தோற்கடிக்க மட்டுமே விரும்புகின்றனர்.”  எனக் கூறி உள்ளார்.