ல்லையில் அத்துமீறுவதை பொறுத்துக்கொள்ள  முடியாது என்று கொடி அமர்வு கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்தது.

ஜம்மு காஷ்மீரில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் அதற்கு பதிலடி அளித்து வருகிறது. சமீபத்தில் எல்லையில் இந்திய கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் இந்திய தரப்பில் 11 பேர் பலியானார்கள்.  எல்லை கிராம மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் எல்லையில் அமைதியின்மை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையிலான கொடி அமர்வு கூட்டம் நடைபெற்றது.

கொடி அமர்வு கூட்டத்தில் கடும் எதிர்ப்பை  இந்தியா பதிவு செய்தது.   பாகிஸ்தானின் நடவடிக்கைகள்  ஏற்றுக்கொள்ள முடியாததது, இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என இந்தியா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

பாகிஸ்தான் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து சுஜித்கார்க் பகுதியில் இருநாட்டு கமாண்டர்கள் இடையிலான கொடி அமர்வு கூட்டம் நடைபெற்றது என இந்திய எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்னதாக இந்தியா தரப்பில் இதுபோன்று கோரிக்கை விடுக்கப்பட்ட போது பாகிஸ்தான் தரப்பில் பதில் எதுவும் அளிக்கப்படவில்லை.

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தான் தரப்பில் 10 அதிகாரிகள் கலந்துக்கொண்ட கூட்டம் 30 நிமிடங்கள் நடைபெற்றது. கூட்டத்தில் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது, கிராமங்களை குறிவைத்து அப்பாவி மக்கள் அவர்களுடைய உடமைகளை குறிவைத்து தாக்கியது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய இந்திய எல்லைப் பாதுகாப்பு படை  பாகிஸ்தானுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இதுபோன்ற அத்துமீறிய தாக்குதல்களை ஏற்றுக்கொள்ள முடியாது, இதனை இனியும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என கூட்டத்தில் இந்தியா தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.