துபாய்:
டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட் இருவரும் நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். ரிஷப் பண்ட் 39 ரன்கள் சேர்த்த நிலையில், ஷதாப் கான் ஓவரில் அவுட் ஆனார்.
விராட் கோலி 57 ரன்கள் அடுத்த நிலையில் ஷாகீன் அப்ரிடி ஓவரில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 13 ரன்களில் வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா 11 ரன்கள், புவனேஸ்வர் குமார் 5 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார். ஹசன் அலி 2 விக்கெட் எடுத்தார்.
இதையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. துவக்கம் முதலே சிறப்பாக ஆடிய பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான முகமது ரிஸ்வான் 77 ரன்களுடனும், பாபர் அசாம் 66 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.