உலக அளவில் முன்றாம் இடத்தில் இருந்து வருகிறது இந்தியா. மின் உற்பத்திக்கு நாம் பெரிதும் அனல் மின் நிலையங்களையே (Thermal Power ) சார்ந்து இருக்கிறோம். 299 பில்லியன் டன்கள் அளவுக்கு நிலக்கரி வளம் இருக்கும் இந்தியாவில் 2020-க்குள் இந்தியாவில் நிலக்கரி உற்பத்தியை 1.5 பில்லியன் டன் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சென்ற நிதியாண்டில் நிலக்கரி இறக்குமதி குறைக்கப்பட்டுள்ளதால் அரசுக்கு ரூ.28 ஆயிரம் கோடி வரை மிச்சமாகியிருப்பது மற்றும் அரசுக்கு ஒரு ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வரை செலவு மி்ச்சமாகும் என பியூஷ் கோயல் நிலக்கரி மற்றும் எரிசக்தித்துறை மந்திரி தெரிவித்தார்.
வரும் ஆண்டுகளில் அனல் மின்சார உற்பத்திற்காக இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலக்கரியை முற்றிலுமாக நிறுத்த அரசு முடிவு செய்துள்ளது. கோல் இந்திய வரலாறு காணாத அளவில் நிலக்கரி உற்பத்தியை அதிகரித்துள்ளதே இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என கூறப்படுகிறது மேலும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு தேவையான நிலக்கரி தாராளமாக இருப்பதாக நிலக்கரி மற்றும் எரிசக்தித்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.