டெல்லி: அண்ணடை நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க ரூ.55ஆயிரம் கோடியில் 6 நீர்மூழ்கி கப்பல்களை கட்ட இந்தியா தயாராகி வருகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளில் அத்துமீறல்களை சமாளிக்க, இந்திய கடற்படையின் பலத்தை மேலும் அதிகரிக்க இந்திய அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி, 6 நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ராணுவ அமைச்சக அதிகாரிகள் கூறியிருப்பதாவது, இந்தியாவின் எல்லைப் பகுதியில் அடிக்கடி சீண்டி வரும், மற்றொருபுறம் தனது கடற்படையின் வலிமையையும் அதிகரித்து வருகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவில் தயாராகி வருகிறது. இந்திய கடற்படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, ராணுவ அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
‘புராஜெக்ட் 75’ என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, 6 நீர் மூழ்கி கப்பல்களை தயாரிக்க ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு, 55 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடன், முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே இந்த கப்பல்கள் கட்டப்படும் என்று, இதற்கான ஆரம்பகட்ட பணிகள் முடிந்து, விரைவில் டெண்டர், அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.
நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க, இரண்டு இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த ஆறு நிறுவனங்களை தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.