டெல்லி: 2020ம் ஆண்டில் இந்தியா தனது 3வது பயணத்தை சந்திரனுக்கு அனுப்ப இருப்பதாக என்று விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் உறுதிப்படுத்தினார்.
டெல்லியில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: லேண்டர் மற்றும் ரோவர் மூலம் சந்திரயன் -3 மீண்டும் நிலவில் மென்மையான தரையிறங்க முயற்சிக்கும்/
அதன் பணிகள் 2020ம் ஆண்டில் நடைபெறும். இருப்பினும், நான் முன்பு கூறியது போல், சந்திரயான் -2 பணி தோல்வி என்று சொல்ல முடியாது.
ஏனெனில் நாங்கள் அதிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். முதல் முயற்சியில் இறங்கிய எந்த நாடும் உலகில் இல்லை. அமெரிக்கா பல முயற்சிகளை எடுத்தது. ஆனால் எங்களுக்கு பல முயற்சிகள் தேவையில்லை என்றார்.