புதுடெல்லி:
மெரிக்காவிடம் இருந்து 30 ராணுவ ஆயுத டிரோன்களை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து வெளியான செயட்டியில், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான உறவில் பதற்றமான சூழல் நீடிக்கும் நிலையில், இந்திய வான்வழி பாதுகாப்பை வலுப்படுத்த இந்த கொள்முதல் உதவிகரமாக இருக்கும் என்றும்,  அமெரிக்காவில், சாண்டியாகோவில் உள்ள ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து எம்கியூ 9-பி பிரிடேட்டர் (MQ-9B Predator drones) என்ற டிரோன்கள் வாங்கப்பட உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில் இந்த டிரோன்கள் தொடர்ந்து 48 மணி நேரம் பறக்கக்கூடிய திறன் கொண்டவையாக இருப்பதுடன்,   1700 கிலோ எடை வரையிலான ஆயுதங்களை அவற்றால் சுமந்து செல்ல முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்சீன கடலில் சீன போர் கப்பல்களின் நடமாட்டத்தையும், இமாலய பகுதிகளில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில், பாகிஸ்தான் அத்துமீறுவதை தடுக்கவும் இந்த டிரோன்கள் பயன்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]