சென்னை:  பிரதமர் மோடி குறித்த பிபிசியின் டாக்குமெண்டரி படம் பிரசிடென்சி கல்லூரியில் திரையிடப்பட்டது. அங்குள்ள விக்டோரியா ஹாஸ்டலில் இரவு திரையிடப்பட்டு மாணாக்கர்கள் கண்டுகளித்தனர்.

கோத்ரா ரயில் எரிப்பு அதைத்தொடர்ந்து நடைபெற்ற கலவரம் தொடர்பாக,  சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த , பிபிசி செய்தி நிறுவனம் தற்போது ஆவணப்படம் வெளியிட்டு உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடியை குற்றம்சாட்டி ஒருதலைப்பட்சமாக இருப்பதாக, அந்த ஆவணப்படுத்துக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.

இதையடுத்து  மோடி கேள்வி” பற்றிய பிபிசி ஆவணப்படம் இரண்டாம் பாகம் வெளியிட்டுள்ளது. இந்த ஆவணப்படம்  யூடியூப்பில் வெளியாகாமல் புதிய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்த ஆவணப்படம், சென்னையில் உள்ள மாநிலக்கல்லூரியில் திரையிடப்பட்டுள்ளது. மாநிலக்கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள விக்டோரியா ஹாண்டலில் இந்த அவனப்படம் நள்ளிரவு திரையிட்டு மாணவர்கள் பார்வையிட்டு உள்ளனர். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, பிபிசியின் சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் திரையிட தடை விதிக்கப்பட்ட நிலையில், தடை மீறி திரைவிட்ட  இந்தியா மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்ததாக, மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த நிலையில், சென்னை கல்லூரியில் திரையிடப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.