ரிசா

ணு ஆயுதங்களை   தாங்கிச் செல்லக்கூடிய அக்னி 5 ஏவுகணை பரிசோதனை வெற்றிகரமாக நடந்துள்ளது

அக்னி 5 ஏவுகணை மிக நீண்ட தூரம் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டதாகும்.  அது மட்டுமின்றி பல சிறப்பு அம்சங்களையும் இந்த ஏவுகளை கொண்டுள்ளது.   இந்த ஏவுகணையின் மூலம் 5000 கீமீ தூரத்தில் உள்ள இலக்குகளை கண்டம் விட்டு காண்டம் தாண்டி தாக்கி அழிக்க முடியும்.   அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறனும் இந்த அக்னி 5 ஏவுகணைக்கு உண்டு

இன்று ஒரிசாவின் கடற்கரையில்  உள்ள  அப்துல் கலாம் என்னும் தீவில் இருந்து இந்த ஏவுகணை தனது அதிக பட்ச தூரமான 5000 கிமீ தூரத்துக்கு பரிசோதனை செய்யப்பட்டது.   இன்று காலை 9.53 க்கு நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.