டெல்லி: உத்தரகாண்ட் சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பனிச்  சரிவால் தவுளிகங்கா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த வெள்ளத்தில் சிக்கி 150 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வெள்ளத்தில் அணை உடைந்ததால் ரிஷிகங்கா நீர்மின் நிலையம் சேதமடைந்து உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை களத்துக்கு விரைந்துள்ளது.

இந்நிலையில்,  பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் உத்தரகாண்ட் சூழல்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக  குறிப்பிட்டு உள்ளார். அவர் தமது பதிவில் கூறி இருப்பதாவது:

உத்தரகாண்ட் பனிப்பாறை வெள்ளம் தொடர்பாக தாமும், தமது அலுவலகமும் தொடர்ந்து அங்குள்ள நிலவரத்தை கண்காணித்து வருகிறோம். இந்த பேரிடருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். நாடே உத்தரகாண்ட் மாநிலத்திற்கு துணை நிற்கும். அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க பிரார்த்தனை செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.