சென்னை: இந்தியாவில் மேலும் புதியதாக 38,079 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. அதேவேளையில்  கொரோனா பாதிப்பு காரணமாக 560 பேர் உயிரிழந்துள்ளனர்.’

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் புதியதாக 38 ஆயிரத்து 079 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 10 லட்சத்து 64 ஆயிரத்து 908 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி கொரோனா நோயாளிகள்  560 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன்மூலம்  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,13,091 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் தொற்றின் தாக்கத்தில் இருந்து  43,916 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 02 லட்சத்து 27 ஆயிரத்து 792 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.31 சதவீதமாக உள்ளது.

தற்போதைய நிலையில் 4,24,0255 பேர் மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்காக  சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39 கோடியே 96 லட்சத்து 95 ஆயிரத்து 879 ஆக உள்ளது.

ஜூலை 16 வரை பரிசோதிக்கப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 44,20,21,954 ஆகும், இதில் நேற்று பரிசோதிக்கப்பட்ட 19,98,715 மாதிரிகள் அடங்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,312 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை  25,31,118 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 144 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,652 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில் கொரோனாவிலிருந்து 2,986 பேர் குணமடைந்த நிலையில், இதுவரையில் 24,68,236 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,48,778 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 3,52,68,724 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது கொரோனா வார்டில் 29,230 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.