டில்லி:

வெளிநாடுகளில் இருந்து 2016ம் ஆண்டில் மட்டும் இந்திய தொழிலாளர்கள் மூலம் 6 ஆயிரத்து 300 கோடி டாலர் நம்நாட்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் 5 அரபு நாடுகளில் இருந்து மட்டும் 3 ஆயிரத்து 300 கோடி டாலர் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று உலக வங்கி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

135 நாடுகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயிரத்து 200 கோடி டாலருடன் முதலிடத்தில் உள்ளது. சவுதி அரேபியா ஆயிரம் கோடி டாலர்களுடனும், குவைத் 400 கோடி டாலர்களுடனும், கத்தார் 300 கோடி டாலர்களுடனும், ஓமன் 200 கோடி டாலர்களுடனும் உள்ளன.

மேலும், மொத்த வெளிநாட்டு வரவில் 5 ஆயிரத்து 500 கோடி டாலர்கள் 10 நாடுகளில் இருந்து மட்டும் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் 5 இஸ்லாமிய நாடுகளும் அடக்கம். அமெரிக்க ஆயிரம் கோடி டாலர், பிரிட்டன் 300 கோடி டாலர், நேபாள் 200 கோடி டாலர், கனடா 200 கோடி டாலர், ஆஸ்திரேலியா 100 கோடி டாலர் என்ற நிலையில் உள்ளது.

உலகளவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்களது உறவினர்களுக்கு 2016ம் ஆண்டில் 57 ஆயிரத்து 400 கோடி டாலரை அனுப்பியுள்ளனர்.