விமானப்பயணத்தின் போது சக பயணிகளுக்கும் விமான ஊழியர்களுக்கும் இடையூறு செய்யும் விதத்திலும், அநாகரீகமாகவும் நடந்து கொள்ளும் பயணிகளின் பட்டியலை இந்தியா தயாரித்துள்ளது. இவர்கள் இனி விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என்று தெரிகிறது.

no_fly

இத்தகவலை மத்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார். பயணிகளின் பாதுகாப்பான மற்றும் இனிமையான பயணத்தை உறுதிசெய்யும்படிக்கு மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்க்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
விமானப் பயணங்களில் அநாகரீகமாகவும் மற்றவர்களுக்கு இடையூறு செய்யும் விதமாகவும் நடந்து கொள்ளும் பயணிகளை கண்டறிந்து அவர்கள் விமானத்தில் பயணம் செய்வதை தடுக்கும் “நோ ஃப்ளை லிஸ்ட்” என்ற முறையை முதலில் அறிமுகபடுத்தியது அமெரிக்காதான். சமீபத்தில் இந்தியாவிலும் இது போன்ற சம்பவங்கள் அதிகரிக்கவே இந்திய அரசும் இந்த முறையை பின்பற்ற முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் புவனேஸ்வரில் இருந்து டில்லி வந்த ஒரு விமானத்தில் ஒரு பயணி தனது உடைகளை தானே களைந்து கொண்டு விமானப் பணிப்பெண்களிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறார். “நோ ஃப்ளை லிஸ்ட்” முறையில் இவர்களைப் போன்றவர்களுக்கு தடை விதிக்கப்பட்டால் விமானப்பயனங்கள் இனி பிரச்சனைகளின்றி இனிமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.