புதுடெல்லி: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாடெங்கிலும் 100 டன்னிற்கும் மேலான மருந்துகள் & மருத்துவ உபகரணங்களை விநியோகம் செய்ய தபால்துறை களமிறக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்படுவதாவது; ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நாடு முழுவதும் 100 டன்னுக்கும் அதிகமான மருந்துகள், செயற்கை சுவாச கருவிகள், பரிசோதனை கருவிகள் போன்றவற்றை மருத்துவமனைகளுக்கும், பயனாளர்களுக்கும், வாகனங்கள் மற்றும் விமானங்கள் மூலமாக தபால்துறை விநியோகம் செய்தது.

இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியின் கீழ் மத்திய அரசின் பல்வேறு திட்டப் பயனாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை வழங்க, நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான தபால் ஊழியர்கள் பணியில் இருக்கிறார்கள்.

அரசால் வழங்கப்படும் ஓய்வூதியம் உள்ளிட்டவைகளை, பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க, மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் நடமாடும் தபால் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.