டில்லி

ரும் குடியரசு தின விழாவுக்குப் பிரேசில் அதிபர் ஜைர் பொல்சொனோரோவை சிறப்பு விருந்தினராக அழைக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.

கடந்த வாரம் ரியாத் நகரில் நடந்த எதிர்கால முதலீட்டு ஊக்குவிப்பு சந்திப்பில் இந்தியப் பிரதமர் மோடி மற்றும் பிரேசில் அதிபர் ஜைர் பொல்சொனோரோ உள்ளிடோர் கலந்துக் கொண்டனர்.  தென் அமெரிக்காவின் நாடுகளான அர்ஜெண்டினா, பிரேசில் மற்றும் சிலே ஆகிய நாடுகள் தெற்காசிய நாடுகளில் வர்த்தகம் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றன.    இந்த சந்திப்பில் இந்தியப் பயணிகளுக்குப் பிரேசில் நாட்டுக்கு விசா இல்லாமல் வர அதிபர் அனுமதி அளித்தார்.

கடந்த சில வருடங்களாக பிரேசில் மற்றும் இந்திய வர்த்தக உறவு மிகவும் அதிகரித்து வருகிறது.   பிரேசில் நிறுவனங்கள் இந்தியாவில் வாகன உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், சுரங்கம், இயற்கை எரிபொருள் மற்றும் காலணி ஆகிய துறைகளில் முதலீடு செய்துள்ளன.  இந்திய நிறுவனங்கள் பிரேசில் நாட்டில் தகவல் தொழில்நுட்பம், மருந்து உற்பத்தி, மின் உற்பத்தி, விவசாய வர்த்தகம், சுரங்கம், பொறியியல் மற்றும் வாகன உற்பத்தித் துறைகளில் முதலீடு செய்துள்ளன.

இந்நிலையில் வரும் குடியரசுதின விழாவுக்கு  பிரேசில் அதிபர் ஜைர் பொல்சொனோரோவை அழைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி  வருகின்றன.   இது குறித்து இரு தரப்பில் இருந்தும் அதிகாரப்பூர்வமான முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.   ஏற்கனவே கடந்த 1996 மற்றும் 2004 ஆம் வருடம் பிரேசில் அதிபர்கள் இந்தியக் குடியரசு விழாவில் கலந்துக் கொண்டுள்ளனர்.