இந்தியா – பாகிஸ்தான் இடையே மூன்று நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் போர் காரணமாக எல்லையோர மாநிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் காரணமாக 25க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் மறுஉத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது.
ஜம்மு, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகளை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது ராஜஸ்தான் மாநிலம் பார்மர், முனபாவ் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து மாநிலத்தின் பிற பகுதிகளுக்குச் செல்லும் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
பல ரயில்கள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது.
போர் காரணமாக அத்தியாவசிய தேவைகளுக்கு இங்குள்ள இந்திய மக்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாவதாகக் கூறப்படுகிறது.