டில்லி,
இந்தியா காஷ்மீரை உணர்வுபூர்வமாக இழந்து வருகிறது என்று பாரதியஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேதனையுடன் கூறி உள்ளார்.
சமீப நாட்களாக மோடி அரசுக்கு எதிராக பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை கூறி வரும், முன்னாள் நிதி அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, தற்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இந்திய பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு தள்ளிவிட்டு உள்ளார் என்று கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
மேலும் மோடி தன்னை சந்திக்க மறுத்து வருவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
இந்நிலையில், காஷ்மீரில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. காஷ்மீரை இந்தியா உணர்வுபூர்வமாக இழந்து வருகிறது. மக்களும் அரசு மீதான நம்பிக்கையை இழந்து விட்டனர்.
இதுகுறித்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பே நான் பிரதமரிடம் அனுமதி கேட்டேன். ஆனால் இதுவரை எனக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் நான் மிகவும் மனம் புண்பட்டு உள்ளேன். சொந்த கட்சியாலேயே நான் இழிவுபடுத்தப்படுகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.