கொழும்பு
நேற்று நடந்த இந்தியா – இலங்கை இரண்டாம் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்துள்ளது.
நேற்றிரவு கொழும்புவில் இந்தியா மற்ரும் இலங்கை அணிகள் இடையிலான 2ஆம் டி20 கிரிக்கெட் போட்டி நடந்தது. நேற்று முன்தினம் நடைபெற வேண்டிய இன்ய்ஹ்ச் போஃப்ஃபி ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது. இந்திய வீரர் குருணவ் பாண்டியாவுக்கு கொரோனா உறுதி ஆனதால் அனைத்து வீரர்களுக்கு பரிசோதனை செய்வதற்காக ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட குருணவ் பாண்ட்யாவுடன் தொடர்பில் இருந்த ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன, சூரியகுமார் யாதவ், பிரித்வி ஷா, சாஹல், கிருஷ்ணப்பா கவுதம், மனிச் பாண்டே, தீபக் சாஹர் உள்ளிட்ட 8 வீரர்கள் தனிமைப்படுத்ஹ்டபட்டனர். சோதனையில் பாதிப்பு இல்லை என தெரிந்த போதும் இவர்கள் போட்டியில் சேர்க்கப்படவில்லை.
எனவே இந்திய அணியில் மீதமுள்ள 11 வீரர்கள் போட்டியில் க்லந்துக் கிஒண்டனர் இவர்களில் ருத்ராஜ் கெய்க்வாட், தேவதத் படிக்கல், நிதீஷ் ராணா, சேத்தன் சகாரியா, உள்ளிட்டோர் அறிமுக வீரர்கள் ஆவார்கள். டாஸில் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்து இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தது.
முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு ஷிகர் தவானும், புதுமுக வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டும் பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் திரட்டி ஓரளவு நல்ல தொடக்கம் தந்தனர். ருதுராஜ் 21 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பிறகு மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர்கள் அகிலா தனஞ்ஜெயாவும், ஹசரங்காவும் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
இதில் இந்திய வீரர்கள் தடுமாற ரன் வேகமும் குறைந்தது. ஷிகர் தவான் (40 ரன், 42 பந்து, 5 பவுண்டரி), அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் (29 ரன்) இருவரும் ஒரே மாதிரி சுழற்பந்து வீச்சில் முட்டிப்போட்டு அடிக்க முயன்று கிளீன் போல்டு ஆனார்கள். சஞ்சு சாம்சன் (7 ரன்), நிதிஷ் ராணாவும் (9 ரன்) சோபிக்கவில்லை.20 ஓவர் முடிவில் இந்திய அணியால் 5 விக்கெட்டுக்கு 132 ரன்களே எடுக்க முடிந்தது. புவனேஷ்வர்குமார் (13 ரன்), நவ்தீப் சைனி (1 ரன்) அவுட் ஆகாமல் இருந்தனர்.
அடுத்து ஆடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 8 ரன் தேவைப்பட்ட போது, 4-வது பந்திலேயே அதை எட்டிப்பிடித்தனர். இந்தியாவின் பீல்டிங் மோசமாக இருந்தது. இந்திய 3 அவுட் வாய்ப்புகளைக் கோட்டை விட்டது. இலங்கை அணியின் வெற்றிக்கு உதவிய தனஞ்ஜெயா டி சில்வா 40 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர்.
இதையொட்டி இந்த போட்டியில் இரு அணிகளும் 1-1 என சம அளவில் உள்ளன. இந்நிலையில் இன்று இரவு 8 மணிக்கு மூன்றாம் மற்றும் இறுதி ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தின் முடிவில் இந்தியா இந்த தொடரைக் கைப்பற்றுமா என்பது தெரிய வரும்.