ஆசிய பசுபிக் பிராந்தியத்திலேயே மிகக் குறைந்த அடிப்படை சம்பளம் கொடுக்கும் நாடு இந்தியா : சர்வே
அனைத்து நிலைகளிலும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் ஓராண்டுக்கான அடிப்படை சம்பளம் இந்தியாவில் தான் மிகவும் குறைந்து காணப்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
அனைத்து வேலை தரங்களிலும் சீனாவின் அடிப்படை சம்பளம் 64-100% இந்தியாவை விட அதிகமாக இருப்பதாகச் செவ்வாய்க்கிழமை அன்று வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் கூறினார்.
இந்தியாவில் உள்ள ஆண்டு அடிப்படை சம்பளம் “ஆசிய பசிபிக் (APAC) பகுதியிலேயே குறைந்தது மற்றும் சீனாவை விடக் குறைவானது” எனத் தெரிய வந்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகள், APAC பகுதியில் 5,500 நிறுவனங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து சுமார் 313 நிறுவனங்கள் கலந்து கொண்ட ஒரு ஆய்வை அடிப்படையாக கொண்டவை.
APAC பகுதியில், அலுவலக பணிக்கான நுழைவு நிலை சம்பளம், சுமார் $ 11,000 சராசரி ஆண்டு அடிப்படை சம்பளம், இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் மிகக் குறைந்ததாக உள்ளன. இவர்களது சகாக்கள் சீனாவில் இதைவிட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் பெறுகின்றனர என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
“சுமார் $ 66,000 கொடுத்துப் பகுதியிலேயே இந்தியா மிகக் குறைந்த சராசரி ஆண்டு அடிப்படை சம்பளம் வழங்குகிறது, இது சீனா கொடுக்கும் சம்பளத்தை விடக் கிட்டத்தட்ட பாதிக்குப் பாதி குறைவானது,” என்றும் தெரிவித்துள்ளது.
அதிக ஊதியம் கொடுக்கும் நாடுகளில், ஆஸ்திரேலியா நுழைவு மற்றும் நடுபகுதி-மேலாண்மை மட்டங்களில் முதலிடத்திலும், மூத்த மற்றும் உயர் பதவிகளில் சிங்கப்பூர் முதலிடத்திலும் உள்ளது.
“சீன சம்பளம் இந்தியாவுடன் ஒப்பிடுகையில் எல்லா நிலைகளிலும் அதிகமாக இருக்கிறது – நுழைவு நிலையில் 81% அதிகமாகவும், நடுப்பகுதி நிலையில் 84% அதிகமாகவும், மூத்த அளவில் இரட்டை மடங்காகவும் மற்றும் மேல் மேலாண்மை மட்டத்தில் 64% அதிகமாகவும் உள்ளது,” என அது சுட்டிக்காட்டியுள்ளது.