டில்லி
பாகிஸ்தான் ஆதரவு நாடான சீனாவிடம் இருந்து ரூ.639 கோடிக்கு இந்தியா குண்டு துளைக்கா ஆடைகள் வாங்க உள்ளது.
இந்தியா மீது பாகிஸ்தானின் ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்கம் பல தாக்குதல்களை நடத்தி உள்ளது. இந்த இயக்கத்தின் தலைவனான மசூத் அசார் பாகிஸ்தானில் அடைக்கலமாக இருக்கிறான். மசூத் அசார் உடல்நிலை சரியில்லை எனவும் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் பாகிஸ்தான் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
ஜெய்ஷ் ஈ முகமது தலைவனான மசூத் அசார் ஒரு பயங்கரவாதி என அறிவிக்க ஐநா பாதுகாப்பு குழுவிடம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு சீன அரசு இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளது. அதனால் ஐநா ச்பை பாதுகாப்புக் குழுவினால் மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது பாகிஸ்தான் தீவிரவாதிக்கு ஆதரவு அளிக்கும் சீனாவிடம் இருந்து இந்தியா ரூ.630 கோடி மதிப்பிலான குண்டு துளைக்காத ஆடைகள் வாங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. முதலில் ராணுவ கொள்முதல் குழு ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து இந்த ஆடைகள் வாங்குவதாக இந்தியா முடிவு செய்திருந்தது. ஆனால் அதே தரமுள்ள ஆடைகளை சீனா குறைவான விலைக்கு அளிக்க முன்வந்ததால் சீனா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடைகளின் மாதிரிகள் அளிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கியபோது சோதனையில் தேர்ச்சி பெற்றதாக ராணுவ தரப்பில் இருந்து கூராப்பட்டுள்ள்து அத்துடன் முதலில் வழங்கப்பட்ட 10000 ஆடைகளும் நல்ல தரத்திலிருந்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த கொள்முதலுக்காக சீனாவுக்கு இந்தியா ரூ. 60 கோடி முன்பணம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.