வாஷிங்டன்
அமெரிக்கா தயாரித்துள்ள போதை மருந்து தயாரிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
உலகெங்கும் போதை மருந்துகள் உற்பத்தி மற்றும் கடத்தல் அதிகரித்து வருகிறது. இந்த போதை மருந்துகளுக்கு அதிகம் அடிமையானோர் அமெரிக்காவில் உள்ளனர். அந்த நாடு போதை மருந்துகள் நாட்டில் நுழைவதைத் தடுக்க பல முயற்சிகள் எடுத்தும் இது முழுமையாக ஒழியவில்லை. அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் உலக நாடுகளில் 20 நாடுகளில் போதை மருந்து உற்பத்தி செய்யப்படுவதாகவும் அங்கிருந்து பல நாடுகளுக்குக் கடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நாடுகள் ஆப்கானிஸ்தான், பகாமாஸ், பெலிஸ்,பொலி வியா, பர்மா, கொலம்பியா, கோஷ்ட ரிகா, டொமினிகன் குடியரசு, ஈக்குவடார், எல் சால்வதார், குவ்டமேல, ஹைதி, ஹோண்டுராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகர குவா,பாகிஸ்தான், பனாமா, பெரு மற்றும் வெனிசுலா ஆகும். இந்த நாடுகளிலிருந்து பல உலக நாடுகளுக்கு மருந்து கடத்தப்படுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும் டிரம்ப், “போதை மருந்துகள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் வர கடும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அவை எல்லைப் புறம் மற்றும் நாட்டினுள் சோதனை ஆகியவை ஆகும். அத்துடன் போதை மருந்தால் பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து மிண்டு வரத் தேவையான சிகிச்சைகளை அளிக்க அரசு தயாராக உள்ளது. இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவையாகும்.
அது மட்டுமின்றி மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளும் போதை மருந்து உற்பத்தியை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நாங்கள் பொலிவியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தும் கடந்த ஒரு வருடத்தில் அந்த நாடுகளால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.
அதே நேரத்தில் கொலம்பியா நாட்டின் அதிபர் இவன் டூக் போதை மருந்து உற்பத்திக்கான மூலப் பொருளான கோகைன் போன்றவற்றை விளைவிக்க விடாமல் தடுத்துள்ளார். இது மேலும் தொடர்ந்து விரிவடைய வேண்டும். அதற்கு அமெரிக்கா மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கொலம்பியாவுக்கு உதவி செய்யத் தயாராக உள்ளது. இந்த நாட்டில் கோகைன் உற்பத்தி வரும் 2025க்குள் முழுமையாக நிறுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.