அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், 165 ரன்கள் இலக்கை விரட்டும் இந்திய அணி, 10 ஓவர்களில் 94 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

இந்திய அணியின் துவக்க வீரர் கேஎல் ராகுல், 6 பந்துகளை சந்தித்து டக்அவுட் ஆனார். அதன்பிறகு இஷான் கிஷானும், கேப்டன் கோலியும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இஷான் கிஷான் 32 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். அதில் 4 சிக்ஸர்கள் அடக்கம். கேப்டன் கோலி 23 பந்துகளில் 35 ரன்கள் அடித்து களத்தில் நிற்கிறார். தற்போது அவருடன் ரிஷப் பன்ட் களமிறங்கியுள்ளார். அவரே விக்கெட் கீப்பராகவும் இருக்கிறார்.

இந்திய அணி தற்போதைய நிலையில், 60 பந்துகளில் 70 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியுள்ளது. இதன்மூலம், இந்திய அணி வெற்றியை சுவைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.