சென்னை:
தமிழகத்திடம் ஏராளமானவற்றை கற்றுக்கொள்ள முடியும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் பாஜகவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பதில்லை என்றும், அவர்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை. எனக்கு தமிழக மக்களுடன் ஒரு உறவு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவைப் பொருத்தவரை தமிழகம் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் முக்கிய பங்காற்ற முடியும் என நம்புகிறேன் என்றும், தேசிய அளவில் இந்தியா என்கிற கோட்பாட்டின் முக்கிய அங்கம் நீங்கள்தான். தமிழகத்தில் இருந்து நானும் மற்றவர்களும் ஏராளமானவற்றைக் கற்றுக்கொள்ள முடியும் என்றும் கூறினார்.
[youtube-feed feed=1]