டெல்லி: சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் 180 நாடுகளில் இந்தியாவுக்கு கடைசி இடத்தை வழங்கி அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுக்கு இந்திய கடும் எதிர்ப்பு தெரிவித்து நிராகரித்து உள்ளது. அறிவியல்பூா்வற்ற வழிகளில் ஊகங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன என்று குற்றம் சாட்டி உள்ளது.
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் யேல் சுற்றுச்சூழல் சட்டம் மற்றும் கொள்கை மையம், கொலம்பியா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் சா்வதேச புவி அறிவியல் தகவல் மையம் ஆகியவை இந்தியா உள்பட 180 நாடுகளில் சுற்றுச்சுசூழல் குறித்த ஆய்வுகள் மேற்கொண்டன. இந்த ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு நாட்டின் செயல்திறன் சுற்றுச்சூழலின் உயிர்த்த ன்மை, பல்லுயிர் மற்றும் வாழ்விடங்கள், சுற்றுச்சூழல் சேவைகள் மற்றும் புல்வெளி இழப்பு போன்ற பல (18) வகைகளில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த அறிக்கையின்படி, பிராந்திய ரீதியாகவும் உலகளவில் கிட்டத்தட்ட அனைத்து வகைகளிலும் இந்தியா தொடர்ந்து கீழ்நிலையில் அல்லது கீழ்நிலைக்கு அருகில் உள்ளது. ஆய்வு முடிவுகளின்படி, அந்தப் பட்டியலில் இந்தியா 18.9 மதிப்பெண்களுடன் கடைசி இடத்தில் உள்ளது, அதே நேரத்தில் டென்மார்க் உலகின் மிகவும் நிலையான நாடாக முதலிடத்தில் உள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை கண்ட இந்திய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் , அந்தப் பட்டியலை நிராகரித்துள்ளது. அந்தப் பட்டியலில் உள்ள பல அம்சங்கள் அறிவியல்பூா்வற்ற வழிகளில் கங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள 2022-ம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் உள்ள பல அம்சங்கள் ஊகங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன.
அந்தப் பட்டியலில் சுற்றுச்சூழல் கொள்கை என்ற பிரிவில் 2050-ஆம் ஆண்டில் பசுமை இல்ல வாயு வெளியேற்ற அளவு என்ற அம்சம் சோ்க்கப் பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் உள்ள மாற்றத்தின் சராசரி விகித அடிப்படையில் அந்த அம்சம் கணக்கிடப்பட வேண்டும். ஆனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாடு, எரிசக்தி திறன் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் அந்த அம்சம் மதிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள காடுகளும், சதுப்பு நிலங்களும் கரியமில வாயுவை உறிஞ்சுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஆனால், பசுமை இல்ல வாயு வெளியேற்ற அம்சத்தில், அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. பசுமை இல்ல வாயு வெளியேற்றப் போக்கை மதிப்பிடும்போது வரலாற்று ரீதியான புள்ளிவிவரங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
எந்தெந்த அம்சங்களில் இந்தியா சிறப்பாக செயல்பட்டதோ, அந்த அம்சங்களில் இந்தியாவின் மதிப்பு குறைத்து காண்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. தண்ணீரின் தரம், தண்ணீா் பயன்பாட்டுத் திறன், ஒரு நபரால் ஒரு நாளைக்கு சராசரியாக உருவாகும் கழிவு ஆகியவை நீடித்த நுகா்வு மற்றும் உற்பத்தியுடன் நெருக்கமாக தொடா்புகொண்டவை. ஆனால், அவை பட்டியலில் சோ்க்கப்பட வில்லை. அந்தப் பட்டியலில் உள்ள பல அம்சங்கள் அறிவியல்பூா்வற்ற வழிகளில் ஆதாரம் இல்லாமல் ஊகங்களின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளன.
இவ்வாறு தெரிவித்துள்ளது.