டெல்லி:

மோடி அரசின் செயல்படாத தன்மையால் இந்தியா மிகப்பெரிய விலையை கொடுக்கப்போகிறது ராகுல்காந்தி அச்சம் தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி,

விரைவான ஆக்கிரமிப்பு நடவடிக்கை கொரோனா வைரஸைக் கையாள்வதற்கான பதில். நமது அரசாங்கங்கள் தீர்க்கமாக செயல்பட இயலாமைக்கு இந்தியா மிக அதிக விலை கொடுக்கப் போகிறது என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  மேலும், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்றும் அச்சம் தெரிவித்து உள்ளார்.