உலகளவில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்று இடங்களுக்கு முன்னேறி 78வது இடத்தை பிடித்துள்ளது.

indian

ட்ரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷ்னல் என்ற சர்வதேச தன்னார்வ நிறுவனம் ஆண்டுதோறும் உலகளவில் ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018ம் ஆண்டிற்கான பட்டியலை இந்த நிறுவனம் வெளியிட்டது. அதில் கடந்த 2017ம் ஆண்டு 81வது இடத்தில் இருந்த இந்தியா மூன்று இடங்களுக்கு முன்னேறி 2018ம் ஆண்டு 78வது இடத்தை பிடித்துள்ளது.

அரசு அலுவலகங்கள் மற்றும் பொது வணிக நிறுவனங்களில் நடைபெறும் ஊழலை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பட்டியலில் சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன. இதில் இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா 87வது இடத்திலும், பாகிஸ்தான் 117வது இடத்திலும் உள்ளன.

அதேபோல் ஊழல் மிகுந்த ஆசிய நாடுகளின் பட்டியலில் மலேசியா 47வது இடத்திலும், மாலத்தீவு 31வது இடத்திலும், பாகிஸ்தான் 33வது இடத்திலும், இந்தியா 41வது இடத்திலும் உள்ளது. அதே சமயம் ஊழல் மிகக் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடத்திலும், நியூசிலாந்து 2வது இடத்திலும் உள்ளன. மேலும், இந்த பட்டியலில் கடந்த ஆண்டு முதல் 20 இடங்களுக்குள் இருந்த அமெரிக்கா பின்னுக்கு தள்ளப்பட்டு 22வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.