பெங்களூரு,
இந்தியாவில் தற்போது ஊதிய பிரச்னை மட்டுமே உள்ளதாகவும் வேலைவாய்ப்பு பிரச்னை இல்லை எனவும் இன்ஃபோசிஸ் நிறுவன முன்னாள் அதிகாரி மோகன்தாஸ் பை தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் இளம் வயதினரே அதிகம் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பல வேலைவாய்ப்புக்கள் குறைவான ஊதியம் அளிக்கும் வகையில் உருவாகின்றன. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை தெரிவித்துள்ளது.
டி வி மோகன்தாஸ் பை இந்தியாவின் தலை சிறந்த பொருளாதார நிபுணர்க்ளில் ஒருவர் ஆவார். இவர் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றியவர் ஆவார். இவர் சமீபத்தில், “இந்தியாவில் பட்டதாரிகள் ஏராளமான எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு ஏற்ற திறமையான வேலைவாய்ப்புக்கள் கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக குறைவான ஊதியம் உள்ள வேலை வாய்ப்புக்கள் ஏராளமாக கிடைக்கின்றன,
இதனால் தற்போது வேலைவாய்ப்பு பிரச்சினையை விட ஊதியப் பிரச்சினையே உள்ளது இதற்கு முக்கிய காரணம் தற்போது உருவாகும் வேலை வாய்ப்புக்கள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரையிலான ஊதியம் கிடைக்கும் வகையில் மட்டுமே உருவாவது ஆகும். இதனால் இளைஞர்களால் தங்களின் முழுத் திறமையை வெளிக்கொணர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது சீனாவில் அதிக அளவில் வேலை கிடைக்கும் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறை அனைத்தும் மின்னணு சாதனங்களை ஒட்டியே உள்ளன. மின்னணு சாதனங்களுக்கு தற்போது நல்ல மதிப்பு உள்ளதால் சீனாவின் பாணியை இந்தியாவும் பின்பற்றலாம். இதன் மூலம் விநியோக சங்கிலி அறுந்து போகாமல் இருக்கும்.
இந்தியாவில் வாகன விற்பனையும் வேலைவாய்ப்பு தொடர்புடையதாகவே உள்ளது. சுமார் 30 முதல் 35 லட்சம் மக்கள் வேலை வாய்ப்பு கிடைத்ததும் தள்ளுபடியில் நான்கு அல்லது இரு சக்கர வாகனங்களை வாங்குகின்றனர். ஆனால் அதிகபட்சமாக 5 லட்சம் பேர் மட்டுமே ஓட்டுனரை அமர்த்திக்கொள்கின்றனர். அதே நேரத்தில் நமது நாட்டில் ஓட்டுனர்கள் சுமார் 30 முதல் 35 லட்சம் பேர் வேலை தேடிக் கொண்டு இருக்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]