புதுடெல்லி:

கடந்த 2018-ம் ஆண்டில் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அதிகபட்சமாக 79 பில்லியன் அமெரிக்க டாலர் அனுப்பப்பட்டுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2018-ம் ஆண்டு 79 பில்லியன் அமெரிக்க டாலர் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

.இந்தியாவுக்கு அடுத்தபடியாக சீனாவுக்கு 67 பில்லியன்  டாலரும், மெக்ஸிகோவுக்கு 36 பில்லியன் டாலரும், பிலிப்பைன்ஸுக்கு 34 பில்லியன் டாலரும் மற்றும் எகிப்துக்கு 29 பில்லியன் டாலரும் வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து பணத்தை பெறும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

இது தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. 2016-ல் 62.7 பில்லியன் டாலரும், 2017-ல் 65.3 பில்லியன் டாலரும் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளது.

கேரளாவில் இயற்கைப் பேரழிவு ஏற்பட்டபோது, இந்தியாவில் உள்ள உறவினர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்பட்ட தொகையால் 14% அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட தொகை தொகை 7 சதவீதமாகவும், பங்களாதேஷுக்கு அனுப்பப்பட்ட தொகை 15 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

இவ்வாறு உலக வங்கி தெரிவித்துள்ளது.