2023-24 விவசாய ஆண்டில் இந்தியா 3,322.98 LMT (லட்சம் மெட்ரிக் டன்கள்) உணவு தானிய உற்பத்தியை பதிவு செய்துள்ளதாக மத்திய வேளாண் அமைச்சும் தெரிவித்துள்ளது, இது 2022-23 விவசாய ஆண்டில் எட்டப்பட்ட 3,296.87 LMT உணவு தானிய உற்பத்தியை விட 26.11 LMT அதிகமாகும்.
அரிசி, கோதுமை மற்றும் தினை பயிர்களின் நல்ல விளைவால் உணவு தானிய உற்பத்தியில் சாதனை வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இறுதி மதிப்பீட்டின்படி, 2023-24 ஆம் ஆண்டில் மொத்த அரிசி உற்பத்தி 1,378.25 LMT என மதிப்பிடப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டின் அரிசி உற்பத்தியான 1,357.55 LMT ஐ விட 20.70 LMT அதிகமாகும்.
கோதுமை உற்பத்தி கடந்த ஆண்டின் 1,105.54 LMT ஐ விட 1,132.92 LMT – 27.38 LMT அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தினை உற்பத்தி 175.72 LMT ஆகவும், கடந்த ஆண்டு 173.21 LMT ஆகவும் இருந்தது.
2023-24ம் ஆண்டில் தென் மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவில் வறட்சி போன்ற சூழ்நிலை இருந்ததாகவும், குறிப்பாக ராஜஸ்தானில் ஆகஸ்ட் மாதத்தில் வறட்சி நீடித்த போதும் உணவு தானிய உற்பத்தி அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.