புதுடெல்லி:

இந்தியாவில் 10 ஆயிரம் மக்களுக்கு 20 மருத்துவ பணியாளர்கள் இருக்கிறார்கள் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன் கூடுதல் பேராசிரியர் ஹிமான்ஷு நெகந்தி கூறும்போது, கடந்த 2012-ம் ஆண்டு 10 ஆயிரம் மக்களுக்கு 19 மருத்துவ பணியாளர்கள் இருந்தனர்.
இந்த எண்ணிக்கை தற்போது 10 ஆயிரம் பேருக்கு 20 மருத்துவ பணியாளர்களாக உயர்ந்துள்ளது.

கடந்த 2012 முதல் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. துரதிஷ்டவசமாக, மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை கிராமப்புறம் மற்றும் நகரங்களிடையே சமமாக இல்லை.

இந்திய மக்கள் தொகையில் 70% கிராமப்புறங்கள் தான். இந்நிலையில், கிராமப் புறங்களுக்கு 36% மருத்துவ பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்.
நம் நாட்டில் மட்டுமல்ல. பல நாடுகளில் இந்த சமமற்ற நிலை உள்ளது.

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கை சமமற்ற நிலையில் உள்ளது.  தனியார் மருத்துவமனைகளில் 80% டாக்டர்களும், 70% செவிலியர்களும் பணியாற்றுகின்றனர் என்றார்.

பேராசிரியர் டாக்டர் அனுப் கரன் பேசும்போது, மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையைப் போக்க தனியார் மருத்துவமனைகளுடன்  அரசு மருத்துவனைகள் இணைந்து செயல்படவேண்டும் என்றார்.