ஹுதுன்பியர்

சீனாவில் நடைபெறும் ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா கொரியாவை வீழ்த்தி முதலிடத்தை பிடித்துள்ளது.

கடந்த செப்டம்பர்.8 ஆம் தேதி சீனாவின் ஹூலுன்பியர் நகரில், 8வது ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டி தொடங்கியது. போட்டியில்ல் நடப்பு சாம்பியன் இந்தியா உட்பட 6 நாடுகள் பங்கேற்றன.  இந்தியா தனது நான்காவது லீக் ஆட்டத்தில்  3-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை தோற்கடித்து, தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

அண்மையில் நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா, ஏற்கனவே சீனாவை 3-0 என்ற கோல் கணக்கிலும், ஜப்பானை 5-0 என்ற கோல் கணக்கிலும், கடந்த ஆண்டு ரன்னர் அப் மலேசியாவை 8-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியது. தொடர்ந்து இன்று தென்கொரியாவை வீழ்த்தி தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்தியா தற்போது இதன்மூலம் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மேலும் இந்திய அணி  வரும் சனிக்கிழமை கடைசி குரூப் சுற்று போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.