கொழும்பு
இந்தியா – இலங்கை – வங்க தேச அணிகளுக்கிடையே நடைபெறும் முத்தரப்பு டி 20 போட்டிகளில் நேற்று நடந்த போட்டியில் இந்தியா வங்க தேசத்தை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது.
தற்போது இந்தியா – இலங்கை – வங்க தேச அணிகளுக்கிடையே முத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகின்றன. இவ்வரிசையில் நேற்று நடந்த போட்டியில் இந்தியாவும் வங்க தேசமும் மோதின.
டாஸ் வென்ற வங்க தேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில்3 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தன. தினேஷ் கார்த்திக் அவுட்டாகாமல் இருந்தார்.
இரண்டாவதாக களம் இறங்கிய வங்க தேச அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதை அடுத்து இந்தியா 4 போட்டியில் மூன்று போட்டிகளில் வெற்றியையும் ஒரு போட்டியில் தோல்வியையும் அடைந்து தற்போது இறுதிப் போட்டிக்கு முன்னேறியது