சிட்னி: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் 3 நாள் பயிற்சி ஆட்டத்தை இந்திய அணி டிரா செய்துள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது என்பதே உண்மை.

இந்திய அணியின் இன்னிங்ஸில் ரிஷப் பன்ட் மற்றும் அனுமன் விஹாரி ஆகியோர் சதமடித்தனர்.

ஆஸ்திரேலியாவை விட, இந்திய அணி 472 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 25 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால், அதன்பிறகு ஆஸ்திரேலியாவின் பென் மெக்டெர்மாட் மற்றும் ஜேக் வில்டர்மத் சதமடித்தார். இந்திய பந்து வீச்சாளர்களின் பவுன்சர் மிரட்டல்களைத் தாண்டியும் அவர்கள் தாக்குப்பிடித்து ஆடினர்.

இந்த 3 நாள் போட்டியில், இந்திய அணி, பேட்டிங் & பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது. இதன்மூலம், வரும் 17ம் தேதி துவங்கவுள்ள அடிலெய்டு பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளது.

 

[youtube-feed feed=1]