டெல்லி:

கொரோனா சோதனை கருவிகள் வாங்குவதில் மோடி அரசு தாமதம் செய்துள்ளது. இதனால், பொதுமக்களுக்கு கொரோன சோதனை செய்வதற்கு உபகரணங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து  காங்கிரஸ் முன்னதாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தி டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில்,

கொரோனா நோய் தொற்றிற்கான சோதனை உபகரணங்கள் வாங்குவதில் இந்தியா தாமதம் செய்துவிட்டது. இப்போது குறைவாகவே உள்ளது.  அதனால், தற்போது, சோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

ஒரு மில்லியன் இந்தியர்களுக்கு வெறும் 149 சோதனைகள் மட்டுமே செய்யப்படுகிறது. லாவோஸ்(157), நைஜர்(182) மற்றும் ஹோண்டரஸ்(162) ஆகிய நாடுகளின் நிலையில்தான் நாம் உள்ளோம்.

கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதற்கு அதிக அளவில் பரிசோதனை செய்வது முக்கியம். ஆனால் அந்த முயற்சியில் தற்போது நாம் இல்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.