அகமதாபாத்: விறுவிறுப்பாக நடைபெற்ற டி20 உலக கோப்பையையின் இறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வென்று சரித்திர சாதனை படைத்துள்ளது.
டி20 உலக கோப்பையில் மூன்றாவது முறையாக வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்திருக்கிறது. மேலும், சொந்த மண்ணில் உலக கோப்பையை வென்ற முதல் அணி, தொடர்ந்து இரண்டு முறை டி20 உலக கோப்பையை வென்ற ஒரே அணி என்ற பெருமையும் இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது. நியூசிலாந்தை 96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் நேற்று (மார்ச் 8ந்தேதி) நடைபெற்றது 15வது ஐசிசி இறுதிப்போட்டியாகும். இதற்கு முன்பு இந்திய அணி விளையாடிய 14 இறுதிப்போட்டிகளில் 7 முறை வெற்றியும், 7 முறை தோல்வியும் அடைந்துள்ளது. கபில் தேவ் முதல் ரோகித் சர்மா வரையிலான காலகட்டத்தில் இந்திய அணி சந்தித்த இறுதிப்போட்டிகளை சந்தித்துள்ளது.
இநத் நிலையில், நடப்பாண்டு, இந்தியா நியூசிலாந்து இடையேயான இறுதிப்போட்டி, குஜராத் தலைநகர் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றறது. இந்த ஆட்டத்தைக்காண அரங்கம் முழுவதும் நிறைந்து காணப்பட்டது. மேலும் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கண்கான ரசிகர்கள் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலம் ஆட்டத்தை ஆவலோடு கண்டு களித்தனர்.
ஆட்டத்தின்தொடக்கத்தில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியினர் மட்டையுடன் களமிறங்கியது. இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரன்களை குவிப்பதில் ஆர்வம் காட்டிய நிலையில் நியூசி பவுலர்கள் விக்கெட்டை எடுப்பதில் கவனம் செலுத்தினர். மற்ற வீரர்கள் பெவிலியனில் அமர்ந்து ஆட்டத்தை கண்டு, தங்களது முகபாவகங்களை வெளிப்படுத்திவந்தனர்.
ஆட்டம் தொடங்கியது முதலே களைகட்டியது. இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. நியூசி பவுலர்களின் பந்துவீச்சை இந்திய வீரர்கள் அடித்து துவசம் செய்தனர். அபிஷேக் ஷர்மாவும், சஞ்சு சாம்சனும் நியூசிலாந்து பவுலர்களின் பந்துகளை பவுண்டரி என பறக்க விட்டனர்.
அபிஷேக் ஷர்மா 18 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை கடந்து அசத்தினார். மறுபுறம் சஞ்சு சாம்சன் பொறுப்பும் அதிரடியும் கலந்து ரன்களை சேர்த்தார். பவர் பிளே முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 92 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 21 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும்.

மறுமுனையில் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் அரை சதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 98 ரன்கள் சேர்த்தது. இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அடித்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
இதேபோன்று மூன்றாவது வீரராக களம் இறங்கிய இசான் கிசனும் தன் பங்கிற்கு தூள் கிளப்பினர். அவரும் பவுண்டரி, சிக்சர் என பறக்க விட 25 பந்துகளில் 54 ரன்கள் குவித்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தாலும், மற்ற வீரர்களின் அதிரடி ஆட்டத்தில் இந்திய ரசிகர்களின் ஏமாற்றம் சந்தோஷமாக மாறியது.
IND vs NZ: பைனலில் சஞ்சு சாம்சன் சிக்சர் அடித்து மைல்கல்லை எட்டினார். இதில் எட்டு சிக்சர்களும், ஐந்து பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தனி நபர் அடித்த அதிகபட்ச ஸ்கோர் இது என்ற பெருமையை அவர் பெற்றார்.
இந்த சந்தோஷத்திற்கு மத்தியில், ஆட்டத்தின் 16-வது ஓவரில் திடீர் சரிவு ஏற்பட்டது. ஒரே ஓவரில், சாம்சன், இசான் கிசான், சூரியகுமார் யாதவ் என அடுத்தது 3 விக்கெட்டுகள் வெளியேறது சலசலப்பை எற்படுத்தியது. ஆனால், அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தை கவனமுடன் எதிர்கொண்டார். நியூசி பவுலர்களின் பந்துகளை லாவகமாக அடித்து வந்தார். பல முறை பவுண்டர்களுக்கு பந்துகளை அடிக்க முயன்றாலும், அவரால் முடியாத நிலை காணப்பட்டது. ல் இறுதிக்கட்டத்தில் 16 பந்துகளுக்கு பவுண்டரிகளையே அடிக்காமல் இந்தியா இருந்தது.
ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கடைசி ஓவரின் சிவம் துபே இரண்டு சிக்ஸர், 3 பவுண்டரி என 24 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது.
இது டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதனால் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கில் நியூசிலாந்து களமிறங்கியது.
நியூசி வீரர்களும் அதிரடியாக ஆடி களத்தை அதிரடி விட்டனர். அரை இறுதியில் 33 பந்துகளில் சதம் விளாசிய, ஃபின் ஆலன் விக்கெட்டை அக்சர் பட்டேல் ஒன்பது ரன்களில் வீழ்த்த நியூசிலாந்து அணியின் சரிவு தொடங்கியது. இதையடுத்து, ரச்சின் ரவீந்திரா ஒரு ரன்னில் பும்ரா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து அணியின் அதிரடி நாயகனான கிளன் பிலிப்ஸ் 5 ரன்களில் ஆட்டமிழக்க மற்றொரு தொடக்க வீரனான டிம் ஃசெபர்ட் மட்டும் அதிரடி காட்டினார். இதனால் நியூசிலாந்து அணி பவர் பிளே முடிவில் 52 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதைப் போன்று அந்த அணியின் நட்சத்திர வீரர் மார்க் சாப்மேன் 3 ரன்களில் ஆட்டமிழக்க, டிம் செபர்ட் 26 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் வெளியேறினார். இதனால் நியூசிலாந்து அணி 72 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி சென்றது. இந்த கட்டத்தில் ஆறாவது விக்கெட்டுக்கு டாரல் மிட்செல் மற்றும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் ஜோடி சேர்ந்து கௌரவமான தோல்வியை தழுவ வேண்டும் என்று நோக்கில் அதிரடி காட்ட முயன்றனர். ஆனால், அது முடியாத நிலையே ஏற்பட்டது. மிட்செல் 11 பந்துகளை எதிர் கொண்டு 17 ரன்களில் அக்சர் பட்டேல் பந்துவீச்சில் ஆட்டம் இழக்க ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணியின் தோல்வி உறுதியான நிலையில் கீழ் வரிசை வீரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் பலன் அளிக்கவில்லை.
இதனால் நியூசிலாந்து அணி 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை தழுவியது. இதன் மூலம் மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி வீரர்கள் சாதனை படைத்தனர்
. இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பைனலில் 96 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
டி20 உலககோப்பை வரலாற்றில் இந்தியா பெற்ற மிகப் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இதுவாகும்.
கோப்பையை வென்ற உடன், கேப்டன் சூரியகுமார் உள்ளிட்ட வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
நியூசிலாந்துக்கு எதிராக 2000 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்ததற்கு, இந்த போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுத்து வெற்றிகனிகளை பறித்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இது 15வது ஐசிசி இறுதிப்போட்டியாகும். கபில் தேவ் முதல் ரோகித் சர்மா வரையிலான காலகட்டத்தில் இந்திய அணி விளையாடிய 14 இறுதிப்போட்டிகளில் 7 முறை வெற்றியும், 7 முறை தோல்வியும் அடைந்துள்ளது.
இந்திய அணி தனது முதல் ஐசிசி இறுதிப்போட்டியை 1983ஆம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் விளையாடியது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பையை இந்தியா வென்றது.
2002ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி மழையால் ரத்தானதால், இலங்கையுடன் கோப்பையை இந்தியா பகிர்ந்து கொண்டது.
தோனி தலைமையில் இந்திய அணி ஐசிசி கோப்பைகளைக் குவிக்கத் தொடங்கியது. 2007ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
2011 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி 28 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை வென்றது.
கடைசியாக 2013 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தோனி தலைமையிலான அணி சாதனை படைத்தது. A
2000ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடமும், 2003 ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடமும் இந்தியா தோல்வியைத் தழுவியது. 2014 டி20 உலகக் கோப்பையில் இலங்கையிடமும், 2017 சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானிடமும் தோல்வியடைந்து கோப்பையை நழுவவிட்டது.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி பலமுறை இறுதிப்போட்டிக்குச் சென்றாலும், கடைசி நேரத்தில் சறுக்கியது. குறிப்பாக 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடமும், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடமும் இந்தியா தோல்வியடைந்தது.
கடந்த 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ரோகித் சர்மா தலைமையிலான அணி கோப்பையை வென்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த 2025ஆம் ஆண்டு துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் ஆனது.
இப்போது நடைபெறும் உலகக்கோப்பை இறுதிப் போட்டியையும் சேர்த்தால் இந்தியா விளையாடும் 15வது ஐசிசி இறுதிப்போட்டி இதுவாகும். இதுவரை 7 வெற்றி, 7 தோல்வி எனச் சம நிலையில் இந்தி அணி உள்ளது.
[youtube-feed feed=1]