டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,50,793 ஆக உயர்ந்து 4344 பேர் மரணம் அடைந்துள்ளனர்
நேற்று இந்தியாவில் 5843 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,53,793 ஆகி உள்ளது. நேற்று 172 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 4344 ஆகி உள்ளது. நேற்று 3571 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 64,277 ஆகி உள்ளது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 82,161 பேராக உள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று 2091 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 54,758 ஆகி உள்ளது நேற்று 97 பேர் உயிர் இழந்து மொத்தம் 1792 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1168 பேர் குணமடைந்து மொத்தம் 16,954 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 644 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 17,728 ஆகி உள்ளது இதில் நேற்று 9 பேர் உயிர் இழந்து மொத்தம் 128 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 611 பேர் குணமடைந்து மொத்தம் 9342 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் நேற்று 361 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,829 ஆகி உள்ளது இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 915 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 503 பேர் குணமடைந்து மொத்தம் 7139 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
டில்லியில் நேற்று 412 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,465 ஆகி உள்ளது. நேற்று 12 பேர் மரணம் அடைந்து இதுவரை மொத்தம் 288 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 183 பேர் குணமடைந்து மொத்தம் 6954 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் நேற்று 236 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,536 ஆகி உள்ளது இதில் நேற்று 3 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 170 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 220 பேர் குணமடைந்து மொத்தம் 4276 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இந்தியாவில் தற்போது மிசோரம், அந்தமான் நிகோபார் தீவுகள், ஆகிய பகுதிகள் கொரோனா பாதிப்பற்ற மாநிலங்களாக உள்ளன.