டெல்லி: “இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் பாதுகாப்பு குறித்து வன்மம் தெரிவித்த ஈரான் தலைவர் காமேனியின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவில்தான் சிறுபான்மையினர் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். பாகிஸ்தான், ஆப்பானிஸ்தான், வங்கதேசம் உள்பட பல இஸ்லாமிய நாடுகளில், அவர்களுக்கு உள்ளேயே மோதல் போக்குகள் நீடித்து வரும் நிலையில், இந்தியாவில் அவர்கள் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு பாதிப்பு என்று ஈரானைச் சேர்ந்த மத குரு மற்றும் மூத்த தலைவர் ஆயடொல்லா அலி காமேனி தெஹ்ரான் நகரில் (செப்.16) பங்கேற்ற நிகழ்ச்சியில் குற்றம் சாட்டியிருந்தார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தான் பேசிய கருத்துகளை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், “இஸ்லாமிய உம்மா என்ற பகிரப்பட்ட அடையாளத்தைப் பற்றி இஸ்லாத்தின் எதிரிகள் எப்போதும் எங்களை அலட்சியப்படுத்த முயன்றனர். “மியான்மர், காசா, இந்தியா அல்லது வேறு எந்த இடத்திலும் ஒரு முஸ்லீம் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி நாம் கவனிக்காமல் இருந்தால், நம்மை முஸ்லிம்களாகக் கருத முடியாது”. “இஸ்லாமிய உலகில், குறிப்பாக ஈரானில் நீண்ட காலமாக மத வேறுபாடுகளை தவறான விருப்பம் தூண்டுகிறது,” என்று அவர் மேலும் கூறினார். ‘
அவரது பேச்சுக்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழுந்துள்ளது. இவர்கள் பாகிஸ்தானையும், ஆப்கானிஸ்தானையும் கட்டுப்படுத்த முடியாதவர்கள், அமைதியாக அனைத்து மதத்தினம் வாழும் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்த முயன்று வருவதாக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், காமேனியின் கருத்து இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. காமேனியின் கூறியது தவறான தகவல், அதை ஏற்றுக்கொள்ள முடியாதது’
இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம் என வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
“ஈரானின் மூத்த தலைவர், இந்தியாவிலுள்ள சிறுபான்மையினர் குறித்து தெரிவித்துள்ள கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறோம்.இதை ஏற்றுக் கொள்ள முடியாது, இந்த கருத்துகள் தவறான தகவல்களைக் கொண்டவை. சிறுபான்மையினர் குறித்து கருத்து தெரிவிக்கும் நாடுகள், பிற நாடுகளைக் குறித்து பேசும்முன், தங்கள் நாட்டின் நிலைமையைக் குறித்து கவலைகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.