வாஷிங்டன்

ரான் நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முழுவதுமாக நிறுத்தி விட்டதாக இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

ஈரான் – அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்த பிரச்னை காரணமாக அமெரிக்கா பல நாடுகளுக்கு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய தடை விதித்தது. அதற்காக இந்த மாதம் 2 ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தது. அந்த கெடுவை மீறி ஈரானுடன் எண்ணெய் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு பொருளாதார தடை விதிக்கபடும் என அச்சுறுத்தல் விடப்பட்டது.

இதை ஒட்டி இந்தியா கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ளது. அத்துடன் கடைசியாக ஏப்ரல் இறுதியில் 10 லட்சம் டன்கள் கச்சா எண்ணெய் வாங்கிய பிறகு இறக்குமதியை முழுவதுமாக நிறுத்தி உள்ளது. இந்த தகவலை நேற்று வாஷிங்டனில் உள்ள இந்திய தூதர் ஹர்ஷ்வர்தன் ஸ்ரீங்கலா தெரிவித்துள்ளார்.

ஹர்ஷ் வர்தன் இந்திய பிரதமர் மோடியின் வெற்றியை குறித்து செய்தியாளர்களிடம் அறிவிக்கும் போது இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் இந்தியா தம்மை அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளி என கருதுவதால் வெனிசுலா நாட்டில் இருந்தும் இறக்குமதியை நிறுத்தி விட்டதாக தெரிவித்தார். இந்தியாவின் எரிபொருள் தேவையில் ஈரான் 10% அளித்ததாகவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.