புதுடெல்லி: 
ன்னிரண்டு இலக்க பயோமெட்ரிக் அடையாள எண்ணான ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒரு நாளைக்கு 3-5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கலாம் என்று இன்போசிஸ் இணை நிறுவனரும் முன்னாள் ஆதாரின் தலைவருமான நந்தன் நிலகேனி கூறியுள்ளார்.
இதப்பற்றி மேலும் அவர் தெரிவித்ததாவது: இந்தியாவில் 1.25 பில்லியன் மக்கள் ஆதார் அட்டையை பயன்படுத்துகின்றனர். இதை வைத்து ஒரு பெரிய தடுப்பூசி திட்டத்தை உருவாக்க முடியும். தடுப்பூசியின் விற்பனையாளர், எந்த இடத்தில் தடுப்பூசி கொடுக்கப்படும், தடுப்பூசியின் பெயர் என்ன என்பதை மக்களுக்கு டிஜிட்டல் முறையில் அனுப்புவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இதனால் இந்தியாவில் ஒருநாளைக்கு 3- 5 மில்லியன் மக்கள் வரை தடுப்பூசி கொடுக்க முடியும்.
ஆதார் அட்டையைப் பயன்படுத்தி தாராளமாக இந்தியாவின் 50-60% மக்களுக்கு தடுப்பூசியை கொடுக்கலாம், அப்படி கொடுத்தால் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு இந்தியா மக்கள் அனைவரும்  அடுத்த ஆறு மாதத்திற்கு நலமாக இருப்பதை நாம் உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் மக்கள் அனைவரும் கொரோனாவை கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, நன்றாக கைகளை கழுவுவது போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், அரசு தொடர்ந்து அந்தந்த இடங்களில் முகாம்களை நடத்தி பெரும்பாலான மக்களை கொரோனா பரிசோதனைக்குட்படுத்தல் கொரோனாவை தொடர்ந்து கட்டுப்படுத்த உதவும்.
ஜனவரி மாதத்திற்குள் குறைந்தது இரண்டு தடுப்பூசிகள் ஆவது நாம் பெற்று விடுவோம். ஏனென்றால் சீரம் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற பல நிறுவனங்கள் நம் கைகளில் உள்ளன, அவை ஒரு மாதத்திற்க்கு 100 கோடி தடுப்பூசிகளை உருவாக்கும் வல்லமை பெற்றிருக்கிறது, இதனை நாம் மாற்ற நாட்டிற்கும் வழங்கலாம்.
சீனாவுடன் 20 ஆண்டுகால உற்பத்தி உறவை கொண்ட அமெரிக்காவும் கூட இன்று இந்தியாவுடன் கைகோர்க்கும் வாய்ப்பை அளித்திருக்கிறது கொரோனா வைரஸ், ஆகையால் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்லலாம்.
 இவாறாக  நந்தன் நிலகேனி தெரிவித்துள்ளார்.