டில்லி

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேச விமானங்கள் அனைத்தும் இந்தியாவில் தரை இறங்க வரும் 22 ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.   இந்தியாவில் இதுவரை 167 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  இவர்களில் 25 பேர் வெளிநாட்டினர்.  இவர்கள் அனைவரும் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள்  ஆவார்கள்.

இதையொட்டி இந்திய அரசு இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.  அதில், :சர்வதேச விமானங்கள் அனைத்தும் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலயங்களிலும் தரை இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இந்த தடை வரும் 22 ஆம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு விதிக்கப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது.