வங்கதேசத்துடனான டெஸ்ட் போட்டி: 208 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி!

Must read

ஐதராபாத்,

ங்கதேசத்துடனான முதல் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில்  208 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

ஐதராபாத், ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்து வரும் வங்கதேசத்துடனான முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ்  வென்று முதலில் பேட் செய்தது இந்தியா.

முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 687 ரன் குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. அதை யடுத்து களமிறங்கிய வங்கதேசம், 3வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 322 ரன் எடுத்திருந்தது.

இந்திய வீரர்களான பந்துவீச்சு அருமையாக இருந்தது.  உமேஷ் 3 விக்கெட்டும்,, அஷ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட்டும், இஷாந்த், புவனேஷ்வர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து 299 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா, 29 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது.

விஜய் 7 ரன், ராகுல் 10 ரன், கோலி 38 ரன், ரகானே 28 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். புஜாரா 54 ரன்னும், ஜடேஜா 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் டஸ்கின், ஷாகிப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 459 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது வங்கதேசம்

தமிம் இக்பால், சவும்யா சர்க்கார் இருவரும் துரத்தலை தொடங்கினர். தமிம் 3 ரன் மட்டுமே எடுத்து அஷ்வின் சுழலில் கோலியிடம் கேட்ச் கொடுத்தார்.

சவும்யா சர்க்கார் – மோமினுல் ஹக் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 60 ரன் சேர்த்தது. சவும்யா 42 ரன், மோமினுல் 27 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நான்காம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேசம் 3 விக்கெட் இழப்புக்கு 103 ரன் எடுத்துள்ளது.

இதற்கிடையே இன்று 5வது நாள் ஆட்டத்தை தொடங்கிய வங்கதேச அணி தரப்பில் முஹமதுல்லா 64 ரன்கள் எடுத்தார். இதன்பின் வங்கதேச அணியினர் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர்.

மேலும் 250 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வங்கதேச அணி தோல்வியை தழுவியது

. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின், ஜடேஜா தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மேலும் இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் காரணமாக வங்க தேசத்துடனான முதல் மற்றும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் 208 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

More articles

Latest article