புதுடெல்லி: 

ஸ்ட்ராஜெனிக்காவின் கொரோனா தடுப்பூசி செயல்திறன் குறித்து சந்தேகம் எழுந்ததால் தென் ஆப்பிரிக்கா அதனை தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளது, ஆனால் தற்போது ஆஸ்ட்ராஜெனிக்காவின் செயல்திறன் பற்றி எந்தவித சந்தேகமும் இல்லை என்று இந்தியா தடுப்பூசியின் 10 மில்லியன் டோசை தயாரிக்க தயாராகியுள்ளது.

ஆஸ்ட்ராஜெனிக்காவின் கொரோனா தடுப்பூசி யின் குறைந்தபட்ச செயல் திறன் குறித்து சந்தேகம் ஏற்பட்டதால் தென் ஆபிரிக்கா இந்த தடுப்பூசி பயன்படுத்துவதை நிறுத்தி வைத்தது.

அமெரிக்காவிற்கு பிறகு அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை கொண்ட இந்தியா கடந்த ஜனவரி 16 ஆம் தேதி முதல் 6 லட்சம் தொழிலாளர்களுக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்தியுள்ளது.

எங்கள் தடுப்பூசி திட்டம் வலுவானது இதில் நாங்கள் முன்னேறுகிறோம் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறோம், இந்த நேரத்தில் யாரும் கவலைப்பட தேவையில்லை என இந்திய உயர் தடுப்பூசி அதிகாரி வினோத்குமார் பால் செய்தி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.