டெல்லி: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் இருந்து, இந்தூருக்கு மாற்றப்படுவதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது. இந்த நிலையில், ஆஸ்திரேலியஅணி இளம் பவுலரான குயின்ஸ்லாந்து பவுலர் குனேமேனை இறக்குவதாக அறிவித்து உள்ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கு டெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுடன் மோதுகிறது. இரு அணிகளுக்க இடையே நடெபற்ற முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில், இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து 3வது டெஸ்ட் போட்டி, இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் வருகிற 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடத்த திட்டமிட்டு இருந்தது.
ஆனால், தர்மசாலாவில் நடைபெற இருந்த 3-வது டெஸ்ட் போட்டி மாற்றப்பட்டுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான பெரும்பாலான மைதானங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் தான் தரம்சாலா மைதானமும் புணரமிக்கப்பட்டு வருகிறது. ஆனால், திடீரென பெய்து வரும் கன மழையால் அவுட் ஃபீல்ட் மட்டும் மிக மோசமாக மாறிவிட்டது. இதையடுத்து, அதை சரி செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால், தர்மசாலாவில் நடைபெற இருந்த டெஸ்ட் போட்டி மாற்றம் செய்யப்படுகிறது. தர்மசாலாவில் நடைபெற இருந்த போட்டி மத்தியபிரதேச மாநிலம் இந்தூருக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளது
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) ஆடுகள பராமரிப்பாளர் தபோஸ் சட்டர்ஜி ஆடுகளம் குறித்த அறிக்கை அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. . இதை பி.சி.சி.ஐ. இன்று அறிவித்தது.
இதற்கிடையில் முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி அடைந்த ஆஸ்திரேலிய புதிய பந்துவீச்சாளரை களமிறக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்து டெல்லியில் நடைபெற உள்ள 2வது டெஸ்ட் போட்டியில், குனேமேன் களமிறங்க வாய்ப்பிருப்பதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்தார்.
இந்திய அணியில், அஸ்வின், ஜடேஜா போன்றோரின் சுழல் பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த நிலையில், இந்திய அணிக்கு டஃப் கொடுக்கும் வகையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு புதுமுக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ குனேமேன் கூடுதலாக சேர்க்கப்பட்டு உள்ளார்.
தற்போது ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் தனது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் விரைவில் தாயகம் திரும்பு உள்ளதால், புதிய வீரராக குனேமேன் அழைக்கப்பட்டு உள்ளார்.
26 வயதான குனேமேன் 13 முதல்தர கிரிக்கெட்டில் விளையாடி 35 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஏற்கனவே 4 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 6 விக்கெட் எடுத்துள்ளார்.
இதுகுறித்து கூறிய குனேமேன, நேற்று முன்தினம் காலையில் நடைபயிற்சிக்கு பிறகு சில பயிற்சிகளை செய்து கொண்டிருந்தபோது போனில் எனக்கு தகவல் வந்தது. உண்மையிலேயே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக எனது பாஸ்போர்ட் தயாராக இருந்தது. நாக்பூர் டெஸ்டின் ஒவ்வொரு ஆட்டத்தையும் ஒரு ரசிகராக கண்டு களித்தேன். டாட் மர்பியின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. ஜடேஜா எப்படி பந்து வீசினார் என்பதை உன்னிப்பாக கவனித்தேன். அணியில் வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.