டில்லி
இந்தியா மற்றும் அமெரிக்கா கல்வி நிலையங்கள் இணைந்து ஆய்வு நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
நெப்ராஸ்கா பல்கலைக்கழகம் அமெரிக்காவில் உள்ள ஒமாகாவில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்துக்கு அமெரிக்க அரசு 11.5 லட்சம் டாலர்கள் நிதி உதவி வழங்கி உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ. 8.03 கோடி ஆகும். இந்த நிதியின் மூலம் அமெரிக்க கல்வி நிறுவனங்கள் பல ஆய்வுகள் நடத்த உள்ளன.
அமெரிக்க தூதரக அதிகாரி கென்னத் ஜஸ்டர், “அமெரிக்க பல்கலைகழகமான நெப்ராஸ்கா அரசின் நிதி உதவியோடு கல்வித் துறையில் பல ஆய்வுகள் நடத்த உள்ளன. அந்த ஆய்வுகளை இந்திய கல்வி நிறுவனங்களுடம் இணைந்து நடத்த பார்ட்னர்ஷிப் 2020 என்னும் பெயரில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பொறியியல், பொது சுகாதாரம், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல துறைகளில் நடத்தப்பட உள்ளன
இதன் மூலம் இந்திய அமெரிக்க மேற்படிப்புத் துறை மேலும் வலிமை பெறும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் நமது இரு நாடுகளும் இணைந்து மேற்படிப்பு துறையில் பல ஆய்வுகளை நடத்துவதால் இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவு மேலும் நெருக்கமாகும்.” என தெரிவித்துள்ளார்.