ண்டன்

ந்தியாவை விழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றுள்ளது.

லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் மோதின.  இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் எடுத்தது. அடுத்து, களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதைத் தொடர்ந்து 173 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸ் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.  எனவே இந்தியா வெற்றிபெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.  444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்தியா நேற்றைய 4-ம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்திருந்தது.

இன்றைய, இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின. இதில் கோலி 49 ரன்களுடனும், ஜடேஜா (0) ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ரஹானே 46 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷர்துல்  ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார். பிறகு உமேஷ் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆக சற்று நிலைத்து நின்று ஆடிய பரத் 23 ரன்னில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்

இந்தியா இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 234 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்தியாவை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றது. இப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.